‘Following the Equator’ என்கிற பயண நூல் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனால் (Mark Twain) எழுதப்பட்டது. உலகின் பல முக்கியப் பகுதிகளுக்கு 1895-1897க்கு இடையே அவர் பயணம் செய்தார். அந்த அனுபவங்களின் தொகுப்பே இந்த நூல். அந்தப் புத்தகத்திலுள்ள இந்தியப் பயண அனுபவங்கள் மட்டும் இந்தப் புத்தகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1800களின் இந்தியாவை இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தியாவின் பல்வேறு கலாசாரங்கள், பழக்க வழக்கங்கள், உடை, உணவு, சமூக அமைப்பு, மொழி, நிலம், அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியாளர்கள் என அனைத்தைப் பற்றியும் சுவாரஸ்யமான, விசித்திரமான மற்றும் முக்கியமான குறிப்புகள் இந்த நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
எளிமையான தமிழில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.
பழங்கால இந்தியாவின் செழுமையையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள ஓர் ஆவணமாகத் திகழும் நூல்.
Be the first to rate this book.