தன் உற்றார் உறவினரைச் சிறைபிடித்து, உடன்பிறந்தோரைக் கொன்று மொகலாய அரியணையைக் கைப்பற்றுகிறார் ஔரங்கசீப். அவரது கொடுங்கோல் ஆட்சியில் இசைக்கும் கலைக்கும் அறவே இடமில்லாமல் போனது.
அத்தகைய சூழலில் அவரது மூத்த அன்பு மகளான ஸெபுன்னிஸா ‘மக்ஃபி’ என்ற ரகசியக் கவிதைக் குழு அமைத்து அதன் மூலம் தன் தந்தைக்கு எதிராகப் புரட்சி செய்கிறாள்.
பாதி வரலாறு பாதி புனைவாக விரியும் இந்த நாவல், 17ம் நூற்றாண்டின் இந்தியாவை ஒரு மொகலாய இளவரசியின் கண்கள் வழியாக நமக்குக் காட்டுகிறது. மக்ஃபியின் திட்டங்கள் இறுதியில் ஔரங்கசீப்பால் முறியடிக்கப்பட்டாலும், அதன் போராட்டங்களினூடாக மொகலாய அரசின் இருண்ட பக்கங்களைக் குறித்த தெளிவான பார்வை நமக்குக் கிடைக்கிறது.
வலிமையான பாத்திரப் படைப்பும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பும் இந்த நாவலை முக்கியமான படைப்பாக்குகின்றன.
கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன் தங்கு தடையில்லாத வாசிப்பனுபவத்தைத் தரும் வகையில் செம்மையாக மொழிபெயர்த்திருக்கிறார்.
Be the first to rate this book.