பாலைவன நாடோடியின் பயணம்!

பாலைவன நாடோடியின் பயணம்!

சோமாலியா பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் பழங்குடி நாடோடிச் சமூகத்தில் பிறந்து, ஐந்து வயதில் தங்கள் சமூகத்தின் பாரம்பரியச் சடங்கான `பிறப்புறுப்புச் சிதைப்பு’க்கு (Female Genital Mutilation) உள்ளானவர் வாரீஸ் டைரி.

பெண்ணின் அந்தரங்க இச்சையை மட்டுப்படுத்தி, பாலியல் உரிமையை சிறுவயதிலேயே இழக்கச் செய்யும் (பெண்) விருத்தசேன சடங்கின் விளைவாக, சோமாலியாவிலுள்ள 80 சதவிகிதப் பெண்கள் புணர்ச்சி செய்து இன்பம் பெறுவது தடுக்கப்படுவதுடன், உறுப்புச் சிதைப்புக்குப் பின் ஏற்படும் அதிர்ச்சி, தொற்று, மூத்திர ஒழுக்குக் குழாய் சிதைப்பு, ஆறாத வடுக்கள் உள்ளிட்டு மரணம் என்று நீண்டுவிடுகின்றது. இதற்கு முடிவு காணும் பொருட்டு ஐநா சபை பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியை `சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு தின’மாகக் அறிவித்துள்ளது.

ஆப்ரிக்காவில் 28 நாடுகளில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. தனது ஐந்து வயதில் இந்தக் கொடுமைக்கு ஆளான வாரிஸ் டைரியை அவளுடைய பதினோராவது வயதில் ஐந்து ஒட்டகங்கள் `வரதட்சணையாக’க் கிடைக்குமென்கிற ஆசையில் அறுபது வயது கிழவருக்கு மணமுடிக்க அவளுடைய அப்பா உத்தேசிக்கையில் அவள் அங்கிருந்து தப்பி தன் அத்தை வசிக்கும் சோமாலியாவின் தலைநகரான மொகாதிஷூவுக்கு வந்து அவருக்கு உதவியாக இருக்கிறாள். அங்கு வாரிஸூக்கும் அவளது சகோதரிக்கும் சண்டை வர அவள் அங்கிருந்து லண்டன் செல்ல வாய்ப்புக் கிடைக்கிறது.

சோமாலியின் தூதராக லண்டனில் வசித்து வருபவரின் வீட்டில் வேலைக்காரியாக பணியில் சேருகிறாள். சில ஆண்டுகளில் தூதரக அதிகாரியின் பணிகாலம் முடிவுக்கு வர அவர்கள் லண்டனிலிருந்து தாயகம் செல்ல தயாராகும் நிலையில் வாரிஸ் மீண்டும் சோமாலியா போக விருப்பமில்லாமல் மெக்டொனால்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்து ஒரு அபார்ட்மெண்டில் தங்குகிறாள். மெக்டொனால்ட்ஸில் வேலை பார்த்து வரும் சமயத்தில் அவளுக்கு ஒரு புகைப்படக்காரர் அறிமுகமாகிறார். அவர் மூலம் மாடலிங் செய்வதற்கான வாய்ப்பு வருகிறது. வாரிஸின் வாழ்வில் அது ஒரு வசந்த காலம்.

தனது வாழ்க்கையை லண்டனில் நீட்டிக்கும் பொருட்டு ஒரு வக்கீலின் அறிவுரைப்படி குடிகாரனனான ஓ’சுலிவனை திருமணம் செய்து கொள்ள, அவன் தினமும் பணம் கேட்டு தொல்லை செய்கிறான். அவனை விவாகரத்து செய்தால் கண்டிப்பாக தன்னை லண்டனை விட்டுவிட்டு சோமாலியாவுக்கு போகச் சொல்லிவிடுவார்கள் என நினைக்கும் போது அவளது தோழியின் சகோதரன் தன்னை மணந்து கொள்ளும்படி வற்புறுத்துகிறான். சந்தர்ப்ப சூழ்நிலை கருதி அவளும் அதற்குச் சம்மதிக்கிறாள். ஆனால் அந்தத் திருமணத்திலும் பிரச்சனை. எனவே அவள் நைஜிலிடமிருந்து தப்பித்து நியூயார்க் வருகிறாள். அங்கு பல சிரமங்களுக்கு இடையில் தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கையில் ஒரு விளம்பர நிறுவனத்தின் மூலம் மாடலிங் வேலை கிடைக்கிறது, அதன் பின் மேரி கிளேய்ர் இதழில் இவளது நேர்காணல் வெளியாகிறது. இப்படி படிப்படியாக வாழ்க்கைத் தரம் உயர அவள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு எதிராக ஐநா சபையால் அமைக்கப்பட்ட கமிட்டியின் சிறப்பு தூதராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு, சோமாலியா உள்ளிட்ட 28 ஆப்ரிக்க நாடுகளில் வழக்கத்திலிருக்கும் இந்தக் `கலாச்சார சடங்கை’ எதிர்த்து ஒரு விழிப்புணர்வு பரவக் காரணமாக இருந்தார். 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் குடியுரிமை கிடைக்கப் பெற்று இப்போது வியன்னாவிலும், போலந்திலும் வசித்து வருகிறார்.

ஐ.நா.சபையினால் சிறப்புத் தூதராக நியமனம் செய்யப்பட்டதோடு பல்வேறு விருதுகளையும் தனது சமூக சேவைக்காகப் பெற்றவர் வாரிஸ்.

வாரிஸ் டைரி என்றால் `பாலைவனப் பூ’ என்று அர்த்தம். ஆங்கிலத்தில் காத்லீன் மில்லரும், வாரிஸ் டைரியும் சேர்ந்து எழுதியிருக்கும் இப்புத்தகத்தைத் தமிழில் எந்தவொரு இடத்திலும் தொய்வில்லாதபடி அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் அர்ஷியா.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி நாலாயிரம் ஆண்டு காலமாக ஆப்ரிக்கக் கலாச்சாரத்தில் இருந்து வந்த, பெண்ணின் பிறப்பு உறுப்பு சிதைப்பை அகற்ற முயன்ற வாரிஸ் டைரியின் சேவையையும் அவர் உடல்ரீதியிலும், மனரீதியிலும் பட்ட சிரமங்களையும் இந்நூல் பேசிச் செல்கிறது.

`எனது பெண்ணுறுப்பை கசாப்பாய்க் கொத்தியெடுத்து, மூடப்பட்டத் தையல்களை அறுவை சிகிச்சை மூலமாக சீர்செய்து திறந்த பின்புதான் என்னால், உருப்படியாக சிறுநீர் கழிக்கவே முடிந்தது. ஒன்பது மாத கால கர்ப்பத்தின் போது வாத்துநடை போட்டு சுரங்கப்பாதையின் வழியே படிகளில் இறங்கி, ஹாலேமுக்கான சாலையின் படிகளில் ஏறி, சந்தையில் உணவுப் பொருளை வாங்கியபோதும், மூன்று நாட்கள் மருத்துவமனையில் வலியால் துடித்தபோதும் டாக்டர்களின் முன்னிலையிலேயே பிரசவ அறைக்குள்ளேயே நிச்சயமாக செத்துவிடுவோமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருந்தது’. இவ்வரிகளைப் படிக்கும் போது வாசகர்கள் அனைவரும் வாரிஸ் டைரி அனுபவித்த வலியைக் கண்டிப்பாக உணர்வார்கள்.

இந்தப் புத்தகத்தின் முடிவில் ` எனது கனவெல்லாம் ஒரு நாள், பெண் இந்த வலியின் அனுபவத்தைப் பெற்றவளாக இருக்கக் கூடாது. அது பழங்கனவாக ஆகியிருக்கவேண்டும். மக்கள், `கேள்விப்பட்டியா, சோமாலியல இப்பெல்லாம் பெண் உறுப்புச் சிதைப்பு நடக்குறதில்லையாமே?” என்று பேச வேண்டும்… அதை நோக்கித்தான் என் பணிகள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ், கடவுள் விரும்பினால், அது நடக்கும்’ என சொல்லி முடிக்கிறார் உலகின் பிரபலமான மாடல் வாரிஸ் டைரி!

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp