ஓரான் பாமுக் படைப்புகள்: ஓர் அறிமுகம்

ஓரான் பாமுக் படைப்புகள்: ஓர் அறிமுகம்

Ferit Orhan Pamuk (generally known simply as Orhan Pamuk; born 7 June 1952) is a Turkish novelist, screenwriter, academic and recipient of the 2006 Nobel Prize in Literature. One of Turkey’s most prominent novelists, his work has sold over thirteen million books in sixty-three languages, making him the country’s best-selling writer.

Pamuk is the author of novels including The White Castle, The Black Book, The New Life, My Name Is Red, Snow and The Museum of Innocence. He is the Robert Yik-Fong Tam Professor in the Humanities at Columbia University, where he teaches writing and comparative literature.

Born in Istanbul, Pamuk is the first Turkish Nobel laureate. He is also the recipient of numerous other literary awards. My Name Is Red won the 2002 Prix du Meilleur Livre Étranger, 2002 Premio Grinzane Cavour and 2003 International IMPAC Dublin Literary Award.

– Wiki

ஜி. குப்புசாமி தமிழில் மொழிபெயர்த்த என் பெயர் சிவப்பு நாவலை அதன் ஆங்கில மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபடியே படித்தேன். அதிலே எனக்கு ஓர் இடைஞ்சல் இருந்தது. ஆங்கில நாவலை மின்புத்தகத்தில் (கிண்டில்) படித்ததால் பக்க எண் என்னவென்று பார்க்க முடியாது. 3 சதவீதம், 7 சதவீதம், 34 சதவீதம் என்று எவ்வளவு படித்து முடிக்கப்பட்டிருக்கிறது என்னும் கணக்கு விவரத்தையே அது கொடுக்கும். சிரமம் எனினும் தமிழில் ஒரு வரியைத் தேர்ந்தெடுத்து அதை ஆங்கில வரியுடன் ஒப்பிடுவதைத் தொடர்ந்து செய்தேன். ஆங்கிலத்தில் மிக நீளமான வசனங்களைப் படித்துத் திகைத்துப்போய் இதை எப்படித் தமிழில் மொழிபெயர்ப்பது என்று யோசித்துக்கொண்டே அந்தத் தமிழ் வசனத்தைத் தேடிப் படித்தால் மொழிபெயர்ப்பு என்பதே தெரியாமல் வசனம் கச்சிதமாக அமைந்திருக்கும். நெடுங்காலமாக மொழிபெயர்ப்பு நூல்களை மூலத்துடன் ஒப்பிட்டுப் படிக்கும்போது எந்த வாசிப்பு எளிமையாகவும், கூடிய இன்பம் தருவதாகவும், படைப்பின் ஆத்மாவைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருக்கிறது என்பதைக் கூர்ந்து பார்ப்பதுண்டு. அந்த விதத்தில் ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் எனக்கு அதிக மரியாதை இருந்தது.

– அ.முத்துலிங்கம்

வெண்ணிறக் கோட்டை – ஓரான் பாமுக் (தமிழில்: ஜி.குப்புசாமி)

‘அவன் இதுபோல பாவித்துக் கொள்வதற்கு அவனுக்கே தன்னைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதும், தன்னைத்தானே எட்ட இருந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் தான் காரணம் என்று நினைத்தேன்.’ [பக். 93]

பர்லாகர் க்விஸ்ட் எழுதிய ‘குள்ளன்’ நாவலில் குள்ளன் என்றொரு பாத்திரம் உண்மையிலேயே உண்டா, அல்லது அது ஆழ்மனதைக் குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதா, இல்லையேல் வேறு ஏதேனும் ஒன்றா, இல்லாத பாத்திரம் தான் கதை சொல்லிக்கொண்டிருக்கிறதா போன்ற மாயத்தோற்றம் நாவல் முழுவதிலுமிருக்கும். ஒட்டுமொத்தமாக வாசித்து முடித்தபின்பே இதுபோன்ற கேள்விகளை எழுப்பி மனநாவால் அசைபோட்டு பேரின்பம் அடையலாம். ‘வெண்ணிறக் கோட்டை’யின் ஓரிரு அத்தியாங்களைக் கடக்கவும் ‘குள்ளன்’ நினைவிற்கு வந்தது.

‘பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை.’

அவனும் இவனும் உருவத்தால் ஒத்திருப்பதும், உருவ ஒற்றுமையைக் கண்டு ஒருவன் திடுக்கிடுவதும் மற்றொருவன் சாந்தம் கொள்வதும், பின்பு இருவரும் கண்ணாடியில் தன்னுருவத்தைக் கண்டு அதிர்ச்சியாவதும், அவன் இவனாகவும் இவன் அவனாகவும் உரையாடுவதும், ஒருவரால் ஒருவர் இன்ஃப்லூயன்ஸ் ஆவதும், சுல்தானின் கீழ் ஒருவன் சிலகாலம் மற்றொருவன் வேறு சிலகாலம் என வேலை பார்ப்பதும், இருவரும் வேறுவேறு அல்லவோ என்றும் – இப்படி யார் எந்தக் கதாப்பாத்திரம் எனும் மாயப்போக்கு நாவலின் இறுதிவரை தொடர்கிறது.

அட்டைப்படம் அபாரம்! கிங் ஆஃப் ஸ்பேட் – உருவங்கள் சிதைந்தும், சரிபாதியாக பிரிக்கப்பட்டும், முகத்திற்கு அருகில் மற்றொரு உருவம் நிழலாகவும் – நாவலின் களம், காலம், பாத்திரத்தின் இயல்பு என ஒட்டுமொத்த சாராம்சத்தையும் ஒற்றைப்படத்தில் பிரபலித்திருப்பது சிறப்பு. பிறமொழிகளில் வெளியான அட்டைப்படத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழில் வெளியானதே மிகச்சிறப்பானதாகத் தோன்றுகிறது. பாமுக் இதைப் பார்த்திருப்பாரா?!

O

என் பெயர் சிவப்பு – ஓரான் பாமுக் (தமிழில்: ஜி.குப்புசாமி)

‘என் பெயர் சிவப்பு’ நாவலில் கதாப்பாத்திரங்களே கதைசொல்லிகள். ஒவ்வொரு அத்தியாயமும் மெட்டாஃபிக்‌ஷன் வடிவத்தில் அமைந்திருக்கின்றன. மரம், குதிரை, நாணயம், இரத்தம், ஓவியம் என தனது கதைகளைத் தானே சொல்கின்றன. பிரேதம் தனக்கு நேரந்த அசம்பாவிதத்தையும் தனது மனதின் பரிதவிப்பையும் சொல்வதாகத்தான் முதல் அத்தியாயம் ஆரம்பமாகின்றது. இம்மாதிரியான யுக்தியில் நான் வாசிக்கும் முதல் நாவல் என்பதால் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பிரமிப்புடன் வாசித்தேன்.

கதைசொல்லியாக வாசகரிடம் நேரடியாக உரையாடும் கதாப்பாத்திரங்கள் தாங்கள் அறிந்தவற்றை முழுவதும் கூறாமல் சில மர்மமுடிச்சுகளைத் தன்னகத்தே இரகஸியமாக வைத்திருக்கின்றன. அதேபோல வசீகரன் மற்றும் எனிஷ்டே இருவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்; கொலையாளியையும் கொலைக்கான காரணங்களையும் துப்பறிவதாக நாவல் விரிகின்றது. இவை சுவாரஸ்யத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள யுக்தி மட்டுமே. நாவல் இயங்கும் தளமோ முற்றிலும் வேறானது. நுண்ணோவியங்கள், நுண்ணோவியர்கள் குறித்து விஸ்தாரமாக விவாதிக்கப்படுவதன் வாயிலாக பல்வேறு தளங்களில் நாவல் பயணிக்கின்றது. வெறும் துப்பறியும் நாவலாக அணுகும் வாசகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ‘ஒரே இழுவையாக இருந்தது’ எனும் சிலரின் கருத்துகளுக்கு இதுவே காரணமாக இருக்கக்கூடும்.

மிகச்சொற்பமான கதாப்பாத்திரங்களையும் வெகுசில நாட்களே நடைபெறும் சம்பவங்களையும் கொண்டு சுமார் 650 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருக்கின்றன. நாவலின் கடைசி அத்தியாயத்தை வாசித்து முடிக்கையில் எந்தக் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் அந்தரத்தில் அல்லாமல், முழுமையை உணரமுடிகிறது. தன்னளவில் முழுமையைக் கொண்டிருக்கும் கதாப்பாத்திரங்களாலும் சம்பவங்களாலும் நாவலும் பூரணத்துவமடைகின்றது. நாவலின் கடைசி வரியை வாசிக்கையில் ஒரு பரிபூரண திருப்தி.

O

பனி – ஓரான் பாமுக் (தமிழில்: ஜி.குப்புசாமி)

‘எனது முதலும் கடைசியுமான அரசியல் நாவல்’ என்று பாமுக்கால் குறிப்பிடப்பட்ட பிரதி ‘பனி’. நீண்ட நெடுங்காலமாக கார்ஸ் நகர மக்களை நவீன வாழ்வை துய்க்கவிடாமல் விலக்கிவைத்து, ஆண்களுக்கிணையான சரிநிகர் உரிமை பெண்களுக்குக் கிடைக்காமல் தடுத்துவந்த மதச்சார்பான சாய்வுகளை ஒரு குழு ஆதரிக்கவும் மற்றொரு குழு எதிர்க்கவும் செய்கிறது. பெண்கள் முக்காடு அணிவதைத் துறக்கவேண்டுமென்று ஒருபுறமும் கூடாதென்று மறுபுறமுமிருக்கும் இருவேறுநிலைகளை யார்பக்கமும் நில்லாமல் தீவிரமான விசாரணைக்குட்படுத்துவதுதான் இந்நாவலின் அடிநாதம். முக்காடைத் துறப்பதற்கு உடன்படாத பல்வேறு பெண்கள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அதைப்பற்றிய கட்டுரையொன்றை எழுதுவதற்காக புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் கா, மீண்டும் கார்ஸ் நகருக்கு வருவதாக நாவல் ஆரம்பமாகின்றது. இந்நாவல் ‘இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு’.

துப்பறியும் நாவலைப் போன்ற தோற்றத்தைத் தந்தாலும் அது பிராதன நோக்கமல்ல என்பதால் பின்பு நடைபெறவிருக்கும் கொலையை முன்பே சொல்லிவிடுகிறார் கதைசொல்லி (ஓரான் பே). முன்கூட்டியே சொல்லியும்கூட அதே சுவாரசியத்துடன் நாவல் நகர்வது பாமுக்கின் தனித்துவம்.

நாவலில் வெகுவாக ரசித்த இன்னுமொரு சிறப்பம்சம் ‘கதாப்பாத்திரங்களின் சித்தரிப்பு’. கதாப்பாத்திரமானது நாவல் முழுவதும் சிந்திப்பதிலும் செயல்படுவதிலும் நூல் பிடித்தாற்போன்று இருப்பதுதான் அநேக படைப்புகளின் பொதுவான அம்சம். அப்படியில்லாமல் அதிலிருந்து விலகுவதாக இருந்தால் அது கதைசொல்லியின் குறுக்கீட்டில் நிகழ்ந்திருக்கும் அல்லது விலகிச்செல்வதற்காக குறிப்பிடும் சம்பவங்களோ அபத்தமாக வெளிப்பட்டுவிடும். இந்நாவலில் உரையாடல் மூலமும் மனஓட்டங்களின் மூலமும் கதாப்பாத்திரம் அறிவானவனாகவும் சிலசமயங்களில் கீழ்மையாக செயல்படுவதாகவும் படைத்திருப்பது மிகச்சிறப்பு. குறிப்பாக ‘கா’வின் சித்தரிப்பு.

ஒரு வார்த்தைக்குள் பல்வேறு விஷயங்களைப் பொதிந்துவைத்து குறிப்பால் உணர்த்தும் பாங்கு பாமுக்கின் யுக்திகளில் ஒன்று. இந்நாவலில் முக்கியமாக கவனிக்கவேண்டியது நாவலின் தலைப்பான ‘பனி’. ‘பனி’ எனும் வார்த்தையை நாவலில் அடிக்கடி குறிப்பிடுவது வெறும் சூழலை விவரிப்பதற்காக மட்டும் அல்ல என்பதைச் சொல்லும் குறிப்பொன்று நாவலிலேயே (பக். 506) உள்ளது. ‘கார்ஸ்ஸிருந்து வந்ததும் பனியைப்பற்றி பல புத்தகங்களை கா படித்திருக்கிறான் என்று தெரிந்தது. அவனது கண்டுபிடிப்புகளில் ஒன்று: அறுகோணத்தில் பனித்திவலை ஒன்று படிகமானபின், அது வானத்திலிருந்து கீழே விழுவதற்கு எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வரை ஆகின்றது. வரும் வழியில் அதன் அசல் வடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து மறைகிறது. அவன் மேலும் படித்தறிந்து கொண்டது, ஒவ்வொரு பனித்திவலையின் வடிவமும் வெப்பம், காற்றின் திசை, வேகம், மேகத்தின் உயரம் மற்றும் வேறுபல புரியாத அம்சங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் பனித்திவலைகள் பலவிதங்களில் மனிதர்களை ஒத்திருக்கிறது என்பதும். கார்ஸ் பொது நூலகத்தில் அமர்ந்து அவன் எழுதிய ‘நான், கா’ கவிதைக்கு பனித்திவலைதான் தூண்டுதலாக இருந்திருக்கிறது. பின்னர் அவனது பத்தொன்பது கவிதைகளையும் ‘பனி’ கவிதைத் தொகுப்பாக ஒழுங்கமைத்தபோது ‘நான், கா’வை பனித்திவலையின் மையப்புள்ளியில் பொருத்தியிருந்தான்.’

இதேபோல வேறொரு எண்ணமும் கேள்வியாக மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘என் பெயர் சிவப்பு’ நாவலின் நாயகியான ஷெகூரேவும் ‘பனி’ நாவலில் இபெக்கும் கணவனைப்பிரிந்து வாழ்பவர்களாவும் அவர்கள் மீது நாயகர்கள் காதல்கொள்வதாகவும் சித்தரித்ததற்கு ஏதேனும் விஷேஷமான சிறப்பம்சம் உண்டோ?!

O

ஓரான் பாமுக் தனது துருக்கி தேசத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காவியமாக்கியவர். பாமுக்கின் இம்மூன்று நாவல்களையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் ஜி.குப்புசாமி. தனக்கான நடையைத் துறந்து பாமுக்கின் நடையை நெருங்கியிருப்பதை ஆங்கில மூலத்துடன் ஒப்பிடும் போது புரிந்துகொள்ளலாம். ஜி.குப்புசாமியின் தமிழ் ஆளுமையாலும் பாமுக்கின் மீதான அவரது காதலாலும் தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரும் கொடையைத் தந்திருக்கிறார்.

O

(தினகரன் வாரமஞ்சரியின் ‘பிரதிபிம்பம்’ பகுதியில் 2017 மார்ச் 12 அன்று பிரசுரமான கட்டுரை இது.)

(நன்றி: சாபக்காடு)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp