இவை 'ஊஞ்சல் தாத்தா' நூலில் வெளியான 'குட்டி குட்டி அணிந்துரைகள்' எனும் பகுதிக்காகப் பெறப்பட்டவை.
என்னைப் போன்ற சிறுவர் சிறுமியருக்கான கதை இது. மிகவும் எளிய நடையில் எழுத்தப்பட்டுள்ளது. இக்கதையில் வரும் வார்த்தைகள், படித்தவுடன் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
கதை பாலைவனத்திலுள்ள ஓர் சிற்றூரில் நடைபெறுவதாக உள்ளது. நான் பாலைவனப் பகுதியைக் கண்டதில்லை. இக்கதையில் அப்பகுதி, என் கண் முன்னால் தெரிகின்றது. அதில் அமைந்திருக்கும் சிற்றூரும் என் கண் முன்னே தோன்றுகிறது.
கதை ஆரம்பிக்கும் போதே சுவாரஷ்யமாக ஆரம்பிக்கிறது. அந்த பூங்காவில் அப்படி என்ன இருக்கிறது? என்ற ஆர்வம் ஊர் மக்களை மட்டுமல்ல என்னையும் தொற்றிக்கொண்டது. அங்கு குழந்தைகள் துள்ளி குதித்தபோது நானும் துள்ளிக் குதித்தேன். அவர்கள் ஊஞ்சல் ஆடியபோது, நானும் அவர்களோடு ஆடினேன். தரையை உதைத்து வானில் கற்பனைச் சிறகில் பறந்தேன்.
தன்னலம் இல்லாத ஒரு தாத்தாவால் அந்த கிராமம் எப்படி மகிழ்வால் நிரம்பியது என்பதை கதையாசிரியர் அருமையாக கூறுகிறார். ஊஞ்சல் தாத்தா சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார் என்ற செய்தியை படிக்கும்போது என் கண்களில் நீர் நிறைந்தது. மனம் கனத்தது. அடுத்து அந்த மாமனிதரின் பணியை யார் செய்வார் என்ற கேள்வி எழுந்த போது, சுட்டிப் பையனாக திரிந்த அந்த சிறுவன் பக்குவப்பட்டு, தாத்தாவின் இடத்தில் இருந்து பணியைச் செய்ய ஆரம்பிக்கிறான் என்ற போது, கனத்த மனம் இலேசானது.
மாமனிதர்கள் தங்கள் கருத்துக்களை விட்டுப் போவதில்லை! விதைத்து விட்டுப் போகிறார்கள். அது மீண்டும் முளைக்கும்!
சு. யுவதர்ஷினி,
8-ஆம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
அழகாபுரி,
பெரியகுளம் வட்டம்,
தேனி மாவட்டம்.
ஒருவர் இறந்துவிட்டால், அவரின் இடத்தை வேறொருவர் அன்பால் நிரப்புவார் எனும் நம்பிக்கையை, இக்கதையின் மூலம் பெறுகிறேன்.
பி. பாலகுமார்
8-ஆம்வகுப்பு
அரசுஉயர்நிலைப்பள்ளி
வெங்களத்தூர்,
திருவண்ணாமலைமாவட்டம்
மற்றவர்களை மகிழ்விக்கும் குணம், அன்பு ,உதவும் பண்பு அனைத்தையும், தாத்தாவை போல - நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
க. சாதனாஸ்ரீ
6-ஆம்வகுப்பு
டாக்டர்சுரேஷ்மெட்ரிக்குலேஷன்பள்ளி
பரமக்குடி,
இராமநாதபுரம்மாவட்டம்
குறும்புக்கார சிறுவனையும் அன்பாலே கையாண்டு, ஒரு பொறுப்புள்ள மனிதனாக ஆக்கலாமென காட்டியுள்ள விதம் நன்று!
கதை முடிந்ததும், எனக்கு மிகவும் பிடித்த திண்பண்டம் சீக்கிரமே முடிந்ததுபோல் உணர்ந்தேன்!
மிஃப்ராஹ் ரைஸ்
7-ஆம் வகுப்பு
மலிக் ஃபஹத் இஸ்லாமிய பள்ளி
கிரீனேக்கர்,
நியூசவுத்வேல்ஸ்,
ஆஸ்திரேலியா
எனக்கும் இதுபோன்ற தாத்தா இல்லையென்ற ஏக்கத்தை உண்டாக்குகிறது இக்கதை. கூடவே, எங்கள்பகுதியிலும் இது போன்ற ஒரு ஊஞ்சல் இல்லை என்ற தவிப்பும் எனக்குள் வருகிறது.
பிரஜன்
8-ஆம் வகுப்பு
அரசு மேல்நிலைப் பள்ளி,
வண்டிப்பெரியார்,
இடுக்கி மாவட்டம்
கேரளா
முட்களுக்கு இடையே பூக்கள் மலர்ந்து மணம் பரப்புவது போல, பாலைவனத்திலும் மகிழ்ச்சியாக மக்கள் வாழ்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
ச. வஜ்ரந்த் ராஜ்
9-ஆம் வகுப்பு
கே.வி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி
விருதுநகர்
தாத்தா அச்சிறுவனை திருத்திய விதம் பிடித்திருந்தது. பாலைவனத்தில் பூங்கா பற்றி கூறியது நன்றாக இருந்தது.
தாத்தா தன்னை சுற்றியுள்ளவர்களை மகிழ்வித்ததைப் போன்று, நானும் மற்றவர்களை மகிழ்விப்பேன்.
சே. பிரியதர்ஷன்
4-ஆம் வகுப்பு
தாகூர் மேனிலைப் பள்ளி,
சாத் நகர்,
ரெங்கா ரெட்டி மாவட்டம்,
தெலங்கானா
தாத்தாவின் நல்ல நல்ல கதைகள் குட்டிச் சிறுவனை கவர்ந்ததைப் போல, இந்த அழகிய கதையும் என்னைக் கவர்ந்தது.
உயிரற்ற பொருளான ஊஞ்சலுக்கு அன்பு செலுத்திய தாத்தாவின் மரணம் கவலையை உண்டாக்கியது.
அ. அர்ஷத்
7-ஆம் வகுப்பு
குமரி மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
பெரியவர்கள் வருங்கால சந்ததியினருக்கு முன்னோடியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதைக்களம் சிறப்புக்குரியது.
பல நற்பண்புகளை விளக்குவதுடன், பாலைவனப் பகுதியில் நிலவும் தட்பவெட்ப சூழல் அமைப்பையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
சி.ம. தர்சனா
5-ஆம் வகுப்பு
செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி,
வண்டிப்பெரியார்,
இடுக்கி மாவட்டம்
கேரளா
பாலைவன மக்களின் வாழ்க்கையை அழகாக கூறுகிற ஆசிரியர், தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். வல்லூறுகளை வேட்டைக்காக பயன்படுத்தினர் என்ற செய்தியை அறிய முடிகிறது.
க. சுதர்ஸன்
11-ஆம் வகுப்பு
கே.வி.எஸ். மெட்ரிக்குலேஷன்மேனிலைப்பள்ளி
விருதுநகர்
ஊஞ்சல் தாத்தா கதை மிகவும் அருமை. ஊஞ்சலைப்பற்றி அறியாத அக்கிராமத்தில், அதனை ஓர் அதிசயப் பொருளாக பார்த்துள்ளனர்.
தாத்தாவின் வாயிலாக, அக்கிராம சிறுவர்கள் பல கதைகளை அறிகிறார்கள். அவரும் குழந்தையாகவே மாறிவிடுகிறார்.
கே.எம்.ஏ. ஹதீஜா இப்ரீன்
8-ஆம் வகுப்பு
முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி,
காயல்பட்டினம்,
திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்
பாலைவனத்திற்கு அந்த சிற்றூர் அழகு!
அச்சிற்றூருக்கு அந்த பூங்கா அழகு!
பூங்காவிற்கு அந்த ஊஞ்சல் அழகு!
அந்த ஊஞ்சலுக்கு, ஊஞ்சல் தாத்தா அழகு!
ஊஞ்சல் தாத்தாவிற்கு அந்த ஊர் சிறுவர்களின் மகிழ்ச்சிதான் அழகு!
ஊஞ்சல் தாத்தாவின் மறைவிற்கு பிறகு
அவரின் இடத்தை நிரப்பிய அந்த சிறுவன் அழகு!
இந்த ஊஞ்சல் தாத்தா சிறுவர் கதையினை
தந்த ஆசிரியரும் அழகுதான்!
சா. ஆஷா
7-ஆம் வகுப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி
வேங்கூர்,
திருக்கோவிலூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்