சினிமா விமர்சனத்தை அரசியல் ரீதியாக பார்த்தோமானால் சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்ற குரல் ஒலிக்கும். சமூகத்தை விமர்சித்து படங்கள் எடுக்கும்பொழுது சரி என்கிறோம். அதே சினிமாவை அரசியல் ரீதியாக தவறு என்றால் கல்லெடுத்து அடிக்கவருகிறார்கள் என்பதே உண்மை. குறிப்பாக அறிவுத்துறையினர் கொண்டாடிய படங்களை நீங்கள் குறை சொல்லிவிடக்கூடாது.கம்பு எடுத்து அதெப்படி அவர்கள் படம் எடுத்துவிட்டால் கொண்டாட வேண்டாமா? என்பார்கள் இத்தருணத்தில் சினிமா அரசியல் விமர்சனம் தேவைப்படுகிறது.அந்த அரசியல் ரீதியான விமர்சனம் செய்கிற புத்தகமும் தேவைப்படுகிறது
(நன்றி: வெண்ணிற இரவுகள்)