இழிவோடும் தாழ்வோடும் தொடரும் நம் வாழ் நிலையானது ஒரு பொன்னுலகாக மாற வேண்டுமானால் கண்டிப்பாக மதமாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. உங்கள் நிலையை மேம்படுத்துவதற்கு நல்ல நண்பர்கள் மற்றும் நலம் விரும்புவோரின் உதவியும் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிட்டும் என்று நான் நம்புகிறேன். உங்களை மேம்படுத்த உடனடியாக நான் மதமாற்றத்தைத் தொடங்கியாக வேண்டும். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்போ முன்னேற்றம் பற்றிய அக்கறையோ எனக்கு சிறிதளவும் கிடையாது. நான் இன்று எதைச் செய்தாலும் அதை உங்களுக்காக, உங்களுடைய நன்மைக்காகவே செய்கிறேன். நீங்கள் என்னை ஏதோ கடவுளைப் பார்ப்பதைப் போல் பார்க்கிறீர்கள். நான் கடவுள் அல்லன். உங்களைப் போல நானும் ஒரு மனிதன். அவ்வளவே. என்னிடம் இருந்து உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் செய்ய நான் அணியமாய் இருக்கிறேன். நம்பிக்கை இழந்து முற்றிலும் தாழ் வுற்றுப் போன நிலையில் இருந்து உங்களை விடுவிக்க உறுதி எடுத்து இருக்கிறேன். இவை எதையும் என்னுடைய தனிப்பட்ட நன்மைகளுக்காக செய்யவில்லை. கரம் கொடுத்து உயர்த்தி உங்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் பயனுள்ளதாய் மாற்ற தொடர்ந்து போராடுவேன். உங்கள் கடமைகளை உணர்ந்து நான் காட்டும் பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டும். அந்தப் பயணம் உளப்பூர்வமானதாக இருக்குமேயானால் - கடினமல்ல - உங்கள் இலக்கை நீங்கள் அடைவீர்கள்.
- டாக்டர் அம்பேத்கர்
(நன்றி: வெண்ணிற இரவுகள்)