கர்ப்பநிலம் கருத்துரை - யமுனா ராஜேந்திரன்
நோர்வேயில் இடம்பெற்ற (24-02-18) கர்ப்பநிலம் நாவல் அறிமுக விழாவில் எழுத்தாளர், விமர்சகர் யமுனா ராஜேந்திரன் ஆற்றிய உரை:
கர்ப்பநிலம் நாவலின் வடிவம் எல்வாறு கவியழகனுடைய முதல் மூன்று நாவல்களிலும் இருந்து வேறுபடுகிறது, அதன் வடிவத்திலுள்ள சிக்கல் எத்தகையது, படைப்பினை முழுமையடைய வைப்பதற்கான அம்சங்கள், வடிவம், கட்டமைப்பு சார்ந்த பார்வைகளையும் பகிர்ந்துகொண்டிருந்தார். நாவல் முன்னிறுத்துகின்ற அரசியல் பற்றியும் எடுத்துரைத்தார்.
இடப்பெயர்வு அவலம், அதன் அத்தனை அவலக்கூறுகளும் படைப்புத்திறனோடும் கற்பனை ஆற்றலோடும் பேசப்பட்டிருக்கின்றது
ஆண்-பெண் உறவு, காதல் காமம் போன்ற சித்தரிப்புகள் தமிழ் வாழ்வைப் பேசும்போது ஒருவகைப் புனிதப்படுத்தலும், அதேவேளை சிங்கள வாழ்வைக் பேசும் போது ஒருவகைச் சமநிலையின்மையையும் வெளிப்படுகின்றது. அதிலுள்ள முரண்நிலைகள் சார்ந்து விமர்சனத்தினையும் யமுனா ராஜேந்திரன் முன்வைத்தார்.
* ஒளிப்பதிவு: அபிசன் அன்பழகன் Anpalagan Nagaratnam
(நன்றி: RoobanSivarajah)