பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளை சொற்பொழிவு
பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் அமெரிக்காவில் உள்ள மின்சோட்டா பல்கலைக் கழகத்தில் 1960ஆம் ஆண்டு கட்டுமானப் பொறியியலில் (சிவில் இன்ஜினியர்) முனைவர் பட்டம் பெற்றவர். கான்பூர் இந்திய தொழில் நுட்ப கழகத்தில் கட்டுமானப் பொறியியல் பேராசிரியராக 1963 முதல் 1974 வரை பணியாற்றியுள்ளார். 1978 முதல் 1989 வரை ஐக்கிய நாட்டில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக பணியாற்றியுள்ளார். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக 1990 முதல் 1996 வரை பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு உயர் கல்வி சபைக்கான துணைத்தலைவராக 1992-2002 வரை பணியாற்றியுள்ளார். இது போன்ற பல முக்கிய உயர் பதவிகளை வகித்துள்ளார். இந்திய பொறியாளர்களின் நிறுவனம் மற்றும் தேசிய அறிவியல் அகடாமியில் உறுப்பினராவார். 2002ஆம் ஆண்டு இவருடைய பணிகளுக்காக குடியரசு தலைவர் வழங்கும் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ளார்.
(நன்றி: RMRLChennai)