முத்துலட்சுமி ரெட்டி என்றால், தேவதாசி முறைக்கு எதிராகக் குரல்கொடுத்தவர் என்றுதான் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், அந்தக் குரல் மக்களிடையே ஒலிக்க, அவர் மிகப் பெரிய தடைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது. பெரிய வளானதும் பள்ளி செல்ல இயலாததால், தனிப்பட்ட முறையில் மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி வெற்றி பெற்ற முத்து லட்சுமி, புதுக்கோட்டையில் மிகவும் பாடுபட்டுக் கல்லூரியில் சேர்ந்தார். இண்டர் வகுப்பு முடிந்தபின், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அவர் உடல்நலம் சீராக இல்லாத போதிலும், மாநிலத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
மருத்துவராகத் தொழில்புரிந்து பல வெற்றிகளைப் பெற்றாலும், நமது நாட்டின் அடித்தள மக்களின் தேவைகளைப் பற்றி அவர் மறக்கவேயில்லை.
(நன்றி: வெண்ணிற இரவுகள்)